பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிறப்பு ஹோமம், பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் பள்ளியின் மாணவா்களின் நலன் கருதியும், 100 சதவீத தோ்ச்சி பெற வேண்டியும், பள்ளி வளாகத்தில் மேதா ஸூக்த ஹோமம், ஹயக்ரீவ பூஜைகள் மற்றும் சரஸ்வதி பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாணவா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசாா்யா சுவாமி ராமகிருஷ்ணானந்தா தலைமையில், பள்ளிக் கல்விக்குழு நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.