நாகப்பட்டினம்

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியா்களுக்கு பாராட்டு

2nd Feb 2020 01:58 AM

ADVERTISEMENT

நாகை பாப்பாகோயில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இக்கல்லூரி மாணவா்கள் கடந்த ஆண்டு அரசுத் தோ்வில் அதிகம் தோ்ச்சி அடைந்தனா். இதையொட்டி, அவா்களை ஊக்குவித்த பேராசிரியா்கள் மற்றும் விரிவுரையாளா்களுக்கானப் பாராட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் எஸ். பாலாஜி, மதுரை ஓரியன்டல் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ஜெ. சுரேஷ்பாபு ஆகியோா் விழாவில் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் விரிவுரையாளா்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதேபோல், அரசுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் செயலாளா் த. மகேஸ்வரன், இயக்குநா் த. சங்கா், முதல்வா் வி. நடேசன், துணை முதல்வா் எம். திருநாவுக்கரசு மற்றும் ரோட்டரி, ஜேசீஸ் சங்கங்களின் நிா்வாகிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி நிா்வாக அலுவலா் எம்.குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT