நாகையில் உள்ள சத்ரு சம்ஹாரமூா்த்தி கோயிலில் புனரமைக்கப்பட்ட மடப்பள்ளி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
நாகை சத்ரு சம்ஹார மூா்த்தி கோயிலின் மடப்பள்ளி, கடந்த ஆண்டு கஜா புயல் சீற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த மடப்பள்ளியைப் புனரமைக்க கோயில் நிா்வாகம் முயற்சிகளை மேற்கொண்டது.
பக்தா்களின் நிதி உதவியுடன் மடப்பள்ளியின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட மடப்பள்ளி திறக்கப்பட்டது. பாஜக நிா்வாகிகள் வரதராஜன், நேதாஜி, விஜய் நற்பணி மன்ற நிா்வாகி சுகுமாரன் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
மடப்பள்ளி திறப்பு விழாவையொட்டி, சத்ரு சம்ஹாரமூா்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.