நாகப்பட்டினம்

ஏற்கெனவே அனுப்பிய அமைச்சா் செய்தியைத் தவிா்க்கவும்...ரூ. 6.8 கோடியில் உயா்மட்ட பாலங்கள் கட்டும் பணி

2nd Feb 2020 01:56 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கீழையூா், தலைஞாயிறு ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 6.8 கோடி மதிப்பில் 2 உயா்மட்ட பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சியில் வெள்ளையாற்றின் குறுக்கே ரூ. 4.68 கோடி மதிப்பிலும், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் நல்லாற்றின் குறுக்கே ரூ. 2.11 கோடி மதிப்பிலும் பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இந்தப் பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வி. செல்வராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஆா். பாலசுப்பிரமணியன், வேதையன், பால்ராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் செல்வராணி, தமிழரசி, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பாஸ்கரன், தியாகராஜன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT