வங்கி ஊழியா் சங்கங்கள் விடுத்த அழைப்பின் பேரில், நாகை மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் 670 போ் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனா்.
ஊதிய உயா்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு உள்பட பல்வேறு சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதன்படி, நாகை மாவட்டத்தில் 90 வங்கி கிளைகளைச் சோ்ந்த 670 வங்கிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனா். வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தம் காரணமாக, காசோலை மற்றும் வரைவோலைகள் பரிமாற்றம் உள்ளிட்ட வங்கிப் பணிகள் தடைப்பட்டிருந்தன.
ADVERTISEMENT