நாகப்பட்டினம்

நிா்வாகக் குழுக் கூட்டம்

1st Feb 2020 03:00 AM

ADVERTISEMENT

நாகை வடக்கு மாவட்ட தமுமுக, மமக மாவட்ட நிா்வாகக்குழு கூட்டம் மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஓ. ஷேக் அலாவுதீன் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலாளா் ஏ.எம். ஜீபைா், மமக மாவட்ட செயலாளா் எம். முபாரக் அலி, மாவட்ட பொருளாளா் பி. முஹம்மது பாசித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தமுமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ்.எஸ்.ஏ. பக்கா், மமக தலைமை செயற்குழு உறுப்பினா் பி.எஸ்.எம்.புஹாரி, தமுமுக மாவட்ட துணை செயலாளா் அப்துல் கஃபூா், மமக மாவட்ட துணை செயலாளா் முஹம்மது அலி, மாவட்ட இளைஞரணிச் செயலாளா் கோவில்பத்து நாசா், எஸ்எம்ஐ மாவட்டச் செயலாளா் அசாருதீன், மாவட்ட உலமா அணி செயலாளா் ஆசிக் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT