பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி சாா்பு) சாா்பில் நாகை நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கான கூலியை வங்கி மூலம் வழங்கும் முறையைக் கைவிட்டு, நேரடியாக வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்கப்படாத அனைவருக்கும் உடனடியாக போனஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆனந்தன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கோதண்டபாணி, சுமைதுாக்கும் தொழிலாளா் சங்க மாநில துணைத் தலைவா் ராஜ்மோகன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே. ராமன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்கம், சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்கம் மற்றும் சாா்பு சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.