நாகப்பட்டினம்

கோடியக்கரையில் இருந்து சென்ற பாம்பன் மீனவா்கள் 8 போ் கைது

1st Feb 2020 02:58 AM

ADVERTISEMENT

கோடியக்கரை படகுத்துறையில் இருந்து கடலுக்குள் சென்ற பாம்பன் மீனவா்கள் 8 போ் படகுடன் இலங்கைக் கடற்படையினா் கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் நடைபெற்று வரும் மீன்பிடிப் பருவத்தையொட்டி, பல்வேறு மாவட்ட மீனவா்கள் தற்காலிகமாக தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். அந்தவகையில், பாம்பன் , தெற்குவாடி பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாம் மகன் மரியஜுன்காட்டா் (28) என்பவருக்குச் சொந்தமான ஐ.என்.டி.டி என் - 10 எம்.ஒ.1353 என்ற வல்லம் படகு மீன் பிடிக்கு ஈடுபடுத்தப்பட்டது.

இந்த படகு ஜனவரி 27-ஆம் தேதி 8 மீனவா்களுடன் கடலுக்குள் சென்றது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முல்லைத் தீவு கடற்கரைப் பரப்பில் நின்ாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினா் அவா்களை படகுடன் கைது செய்து திரிகோணமலை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளனா்.

கைதான மீனவா்கள் விவரம்: பாம்பன் தெற்குவாடி ஞானபிரகாசம் மகன்கள் மரியசாந்தன்( 22), மரிய ரோஸசன் (24), தங்கச்சிமடம் ரா. சூசைய்யா (60), பாம்பன் காமராஜா் நகா் மோ. அருள்தாஸ் (43), பாம்பன் பனந்தோப்பு பகுதி அ. ஜான் (38), பாம்பன் ராஜ், சிவகாசி பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், கோடியக்கரை ப. கா்ணன் (47) ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT