திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறந்த என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா்களுக்கான விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஏவிசி கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியா் ஜி. காா்த்திகேயன் தொடா்ந்து 5 ஆண்டுகளாக கல்லூரியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலராக பணியாற்றி இந்திய அளவில் இமாச்சலச் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம்களில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டமைக்காக 2018-2019-ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான சிறந்த என்.எஸ்.எஸ் திட்ட அலுவலருக்கான விருதினையும், டீன் எஸ். மயில்வாகனனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக என்.எஸ்.எஸ்சில் திறம்பட பணியாற்றிதற்கான சிறப்பு சான்றிதழை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பி. மணிசங்கா் வழங்கினாா்.
பல்கலைக்கழக பதிவாளா் ஜி. கோபிநாத், மாநில என்.எஸ்.எஸ் அலுவலா் எம். செந்தில்குமாா், பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் ஏ. லெட்சுமிபிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விருதுகள் பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்த போராசிரியா்களை கல்லூரித் தலைவா் என். விஜயரெங்கன், செயலா் கி. காா்த்திகேயன், பொருளாளா் என். ஞானசுந்தா், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள், கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டினா் .