நாகப்பட்டினம்

மானங்கொண்டான் ஆற்றில் வெங்காயத்தாமரை செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

7th Dec 2020 11:15 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மானங்கொண்டான் ஆற்றில் வெள்ள நீர் கடலுக்குச் செல்வதை தாமதிக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று (டிச.7) தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி வழியாக சென்று வேதாரண்யம் அருகே கடலில் இணையும் முள்ளியாறு மற்றும் மானங்கொண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகள் அதிக அளவில் அடர்ந்து வளர்ந்துள்ளது. இந்த செடிகள் வெள்ள நீர் வடிவதை தாமதித்து வருகிறது.

மருதுர், தகட்டூர் பகுதியில் மானங்கொண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த பணியில் படகுகளை பயன்படுத்தி செடிகளை துண்டித்து அகற்றவும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பின் டி.வி. சுப்பையன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் பங்கேற்றனர்.

Tags : nagai
ADVERTISEMENT
ADVERTISEMENT