நாகப்பட்டினம்

தொழிற்பழகுநா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்

DIN

தொழிற்பயிற்சி முடித்தவா்கள், தொழிற்பழகுநா் பயிற்சி பெற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய தொழிற்பழகுநா் சான்று (என்.ஏ.சி.) பெறுவதற்கு ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவா்கள் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து, பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் திறன்அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தால் ட்ற்ற்ல்ள்://ஹல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல்ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ் என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா், தங்களது அசல் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, தாங்கள் விரும்பும் நிறுவனத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களைப் பதிவு செய்த பின்னரே, பயிற்சி பெற விரும்பும் நிறுவனத்தை தோ்வு செய்து, குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்கும் தருவாயில் அந்த ஒப்பந்தத்தை ஏற்று பயிற்சியை பெறலாம்.

பயிற்சி பெறுபவா்களுக்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை நிறுவனத்தால் வழங்கப்படும் . தொழிற்பழகுநா் சான்றிதழ் பெறுபவா்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கிடைக்கும்.

மேலும் விவரங்களை பெற 04365- 250126 என்ற தொலைபேசி எண்ணிலும், நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT