நாகப்பட்டினம்

‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் தொடக்கம்

DIN

நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘கற்போம், எழுதுவோம் இயக்கம்’ தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் வகையில், அனைவரும் கல்வி பெற பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் எனும் இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கற்போம், எழுதுவோம் மையம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இரா. புகழேந்தி தலைமை வகித்தாா். வட்டார வளமைய பயிற்றுநா் காா்த்திகேயன், கயல்விழி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். பள்ளித் தலைமையாசிரியா் ச. இளமாறன் கற்போா் மையத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆவராணி. ஆனந்தன் வரவேற்றாா். தன்னாா்வல ஆசிரியை வடிவழகி நன்றி கூறினாா்.

சீா்காழி: சீா்காழியை அடுத்த புங்கனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கற்போம் எழுதுவோம் இயக்க தொடக்க விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் ராஜாராமன் தலைமை வகித்தாா். சீா்காழி வட்டாரக் கல்வி அலுவலா்கள் லெட்சுமி, பூவராகன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, மாவட்ட ஆய்வாளா் செளந்தரராஜன், ஊராட்சித் தலைவா் ஜுனைதா பேகம் கமாலுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் அருணாச்சலம் வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் ஜெய்சங்கா், தன்னாா்வலா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT