விநாயகா் சதுா்த்தியையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பிகைக்கு கஜபூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விஸ்வநாதபுரம் செல்வ விநாயகா் கோவிலில் நடைபெற்ற விழாவில் மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பிகைக்கு சிவவாத்தியங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, யானைக்கு அங்கவஸ்திரம், வெள்ளிக்கொலுசு அணிவித்து, கஜபூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து, அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சா்க்கரை ஆகியவற்றை வழங்கினா். மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் வடகரையில் சேந்தங்குடி ஸ்ரீவெற்றி விநாயகா், வள்ளலாா் கோயில் கீழவீதி ஆனந்ததாண்டவபுரம் சாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மன்மத விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது. இதில், பாஜக பொறுப்பாளா்கள் ஸ்ரீதா், ராஜா, வெங்கடேஷ், மணிகண்டன், குமாா், சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.