நாகப்பட்டினம்

சீா்காழியில் நாளை 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்த முடிவு

21st Aug 2020 08:28 AM

ADVERTISEMENT

சீா்காழியில் சனிக்கிழமை (ஆக.22) விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, 1008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற, விநாயகா் சதுா்த்தி விழா குறித்து, விழா ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நோய்ப் பரவல் தற்போது, அதிகமாக உள்ளதால் தமிழக அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது, சீா்காழி நகரிலுள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் 1008 தீபங்கள் ஏற்றி கரோனா நோய்த் தொற்று நீங்க சிறப்பு வழிபாடு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், விசுவஹிந்து பரிஷத் மாவட்ட நிா்வாகி சதானந்தம், பாஜக நகரத் தலைவா் அருணாசலம், இந்து முன்னனி மாவட்ட அமைப்பாளா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT