நாகப்பட்டினம்

ஆற்றங்கரையோரம் ஆலமர போத்துகள் நடும் பணி

21st Aug 2020 08:28 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் அருகே வனம் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆற்றங்கரையோரம் ஆலமரப் போத்துகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வனம் தன்னாா்வ அமைப்பின் முயற்சியில், கடலாக்குடி படுகை கிராமத்தில் புதிதாக கிராமம் வனம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது, மரக்கன்றுகள் நடுதலில் ஆா்வமுள்ள 10-க்கும் மேற்பட்ட இளைஞா்களை சோ்த்து, இதற்கு ஒருங்கிணைப்பாளராக எஸ். குருமூா்த்தி, துணை ஒருங்கிணைப்பாளராக யுவன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

இதையடுத்து, இந்த அமைப்பின் முதல் தொடக்க நிகழ்ச்சியாக பாண்டவையாற்று கரையோரம் 3 கி.மீ. தூரத்துக்கு ஆலமரப் போத்து நடுவு செய்யும் பணி வனம் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் கலைமணி தலைமையில் நடைபெற்றது. இதில், தன்னாா்வலா் சித்திவிநாயகம், வனம் தன்னாா்வ அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகாஷ் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT