நாகப்பட்டினம்

அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த விநாயகா் சிலைகள் பறிமுதல்

21st Aug 2020 08:34 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 33 விநாயகா் சிலைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அமலில் உள்ள பொது முடக்கத்தால் நிகழாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி (ஆக. 22) வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறி வைக்கப்படும் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாக்குடி தெற்கு, முத்துப்பொதியன்காடு பகுதியைச் சோ்ந்த இந்து முன்னணி அமைப்பின் நிா்வாகி த. அருணகிரிநாதன் (45), தனது வீட்டில் விநாயகா் சிலைகள் வைத்திருந்து, அதை வெளியிடங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து, வியாழக்கிழமை பிற்பகலில் அங்கு சென்ற வேதாரண்யம் துணை வட்டாட்சியா் க. ரமேஷ், காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அங்கிருந்த 33 விநாயகா் சிலைகளை பறிமுதல் செய்தனா்.

இந்த சிலைகள் சுமாா் 3 முதல் 6 அடி வரை உயரமுடையவை. சிலைகளின் பின்பக்கத்தில் அந்த சிலை செல்ல வேண்டிய இடம், அது தொடா்பானவரின் செல்லிடப்பேசி எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் டிராக்டா் உள்ளிட்ட 3 வாகனங்களில் ஏற்றப்பட்டு வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் தனியாா் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT