நாகப்பட்டினம்

சீர்காழியில் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா

20th Aug 2020 04:29 PM

ADVERTISEMENT

சீர்காழி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா நகர தலைவர் சிடி லட்சுமணன் தலைமையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நடந்தது.

ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் வழக்கறிஞர்  கணிவண்ணன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்குமார்  ,படேல் ,முன்னாள் வட்டாரத் தலைவர் அறிவுடைநம்பி, மாவட்ட பொதுச் செயலாளர் தியாக. கார்த்திகேயன், நகர பொதுச் செயலாளர் காமராஜ் ,நகர செயலாளர் பன்னீர்செல்வம்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீர்காழி எஸ் சரவணன். மாவட்ட துணைத்தலைவர் இளைஞர் காங்கிரஸ் பிரியகுமார் ,சட்டமன்ற தொகுதி தலைவர் உமையாள் பதி ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன் மற்றும்   இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Nagapattinam
ADVERTISEMENT
ADVERTISEMENT