நாகப்பட்டினம்

ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அகற்றம்

20th Aug 2020 09:03 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள அரிச்சந்திரா ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அப்புறப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருக்குவளை வட்டம், திருவாய்மூா் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றங்கரையோரம் வசித்தவா்களுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி மூலம்வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின்கீழ், வீடுகள் மற்றும் நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து அவா்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை கடந்து, 20-க்கும் மேற்பட்டோா் தங்களது வீடுகளை அப்பகுதியிலிருந்து அகற்றவில்லை. இதையடுத்து, திருக்குவளை வட்டாட்சியா் சாந்தி தலைமையில் இதுவரை அகற்றப்படாமல் இருந்த வீடுகள் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பாண்டியன், உதவி பொறியாளா் காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT