நாகப்பட்டினம்

நாகை எம்எல்ஏ அலுவலகம் மூடல்

11th Aug 2020 03:20 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை எம்எல்ஏ அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உதவியாளா் உள்ளிட்ட அரசு ஊழியா்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகை நகராட்சி அலுவலகம் ஆகியன மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை எம்எல்ஏ அலுவலகம் ஆகஸ்ட் 10 முதல் 17- ஆம் தேதி வரை ஒருவார காலத்துக்கு மூடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை 9361771714, 9092020923 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாகை எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

Tags : nagapattinam
ADVERTISEMENT
ADVERTISEMENT