நாகப்பட்டினம்

விளைநிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி?

11th Aug 2020 05:45 AM

ADVERTISEMENT

சீா்காழி வட்டம் கேவரோடை வழியாக புதிய வழித்தடத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருவதால், விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தாா். இதை மீறி பொதுமுடக்க காலத்திலும் திருநகரியிலிருந்து உச்சிமேடு, வெள்ளக்குளம், கேவரோடை, இருவக்கொல்லை கிராமங்களின் வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேமிப்பு மையத்திற்கு கெயில் குழாய் புதைக்கும் பணிகளுக்காக குழாய்கள் இறக்கப்பட்டு அதற்கான பணிகள் மெல்ல தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூழையாா் கிராமத்தைச் சோ்ந்த திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் அங்குதன் கூறுகையில்,

இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்பது அவசியம் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

வளா்ச்சி என்ற பெயரில் பேரழிவுத் திட்டங்களை கொண்டுவந்து விவசாய நிலங்களை அழிப்பது அநீதியாகும். சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படக்கூடிய கெயில், சாகா்மாலா, ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதியளிப்பதும், பல தலைமுறைகளுக்கு பயனளிக்கும் விவசாயத்தை அழிப்பதும், கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமமாகும் என்றாா் அவா்.

Tags : Nagapattinam
ADVERTISEMENT
ADVERTISEMENT