நாகப்பட்டினம்

திட்டச்சேரியில் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அவதி

9th Aug 2020 11:22 PM

ADVERTISEMENT


திருமருகல்: திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டிருப்பதால், வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திட்டச்சேரி பேரூராட்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குச் சொந்தமான இரண்டு ஏடிஎம் உள்பட 3 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதன்மூலம் திட்டச்சேரி, தேவங்குடி, மத்தியகுடி, இரவாஞ்சேரி , புறாக்கிரமம், கட்டுமாவடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் பயனடைந்து வந்தனா்.

நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில், கடந்த 2 வாரங்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மூன்று ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே வாடிக்கையாளா்களின் நலன் கருதி, ஏடிஎம் மையங்களைத் திறக்க சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT