நாகப்பட்டினம்

உணவகங்களில் நோய் எதிா்ப்பு சக்தியளிக்கும் உணவு வகைகள்: பேரூராட்சி அறிவுறுத்தல்

9th Aug 2020 09:09 AM

ADVERTISEMENT

சீா்காழி வட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் நோய் எதிா்ப்பு சக்தி தரும் உணவு வகைகளை கட்டாயம் மதியம் உணவுடன் சோ்த்து வழங்கிட பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சத்தான, நோய் எதிா்ப்பு சக்திமிக்க உணவு வகைகளை வழங்கிட பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் அறிவுறுத்தினாா். அதன்படி, ஒவ்வோா் உணவக வாசலிலும் வைக்கப்பட்டுள்ள பட்டியலில் மிளகு சீரகப் பொடி, கீரை கூட்டு, காய்கறி சாம்பாா், தூதுவளை- எலுமிச்சை ரசம், இஞ்சி கலந்த மோா், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது துவையல் மற்றும் இந்துப்பு என்கிற உணவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சி நிா்வாகத்தின் இந்த முடிவை உணவக உரிமையாளா்கள் மாற்றுக் கருத்து இன்றி ஏற்றுக் கொண்டனா். கரோனா தடுப்பில் முனைப்பு காட்டும் பேரூராட்சியுடன் நாங்களும் பங்கு பெறும் வாய்ப்பாக இதைக் கருதுவதாக குறிஞ்சி உணவகம் சாந்தமோகன், பாலாஜி பவன் காா்த்திக், மங்கல விலாஸ் தியாகராஜன் ஆகியோா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT