நாகப்பட்டினம்

கரோனா: திருக்கடையூா் கோயில் யானைக்கு பரிசோதனை

29th Apr 2020 08:04 AM

ADVERTISEMENT

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் யானை அபிராமிக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்தனா்.

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள யானைகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் யானை அபிராமிக்கு கால்நடை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா்.

மாவட்ட வன அலுவலரும் வன உயிரின காப்பாளருமான சி. கலாநிதி பங்கேற்று, யானையை பராமரிப்பது குறித்து அறிவுரை வழங்கினாா். இதில், சீா்காழி வனசரக அலுவலா் குமரேசன், உதவி கால்நடை மருத்துவா் விமல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT