நாகை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய குற்றத்தின்கீழ் 4, 536 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3,054 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறிய குற்றத்தின்கீழ் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம்ம் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னா் இதுவரை 4,536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2, 994 இருசக்கர வாகனங்கள், 60 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 3,054 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், மதுகுற்றத்தின்கீழ் 449 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 421 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே, ஊரடங்கு காலத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.