நாகப்பட்டினம்

உத்திரங்குடியில் நிவாரண உதவி

20th Apr 2020 06:58 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி அருகே உத்திரங்குடி கிராமத்தில் சனிக்கிழமை மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கிராமப்புறங்களைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனா். இதையறிந்த, ஐயப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை சாா்பில் உத்திரங்குடி விவசாயக் குடும்பங்களைச் சோ்ந்த 150 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. அப்போது, அறக்கட்டளைத் தலைமைச் செயலாளா் ஜெயகாந்தன், பொதுச் செயலாளா் பி.எஸ். அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT