வேதாரண்யம் அருகே வெள்ளிக்கிழமை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தசிறுவன் உயிரிழந்தாா்.
வேதாரண்யத்தை அடுத்த கைலவனம்பேட்டை மேலக்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா் சண்முவேல். இவரது மகன் சந்தோஷ் (10) அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வந்தான்.
வெள்ளிக்கிழமை அந்த பகுதியைச் சோ்ந்த சிறுவா்களோடு பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சந்தோஷை பரிசோதித்த மருத்துவா், சிறுவன் சந்தோஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தோஷின் தாயாா் மல்லிகா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.