நாகப்பட்டினம்

முகநூலில் இஸ்லாமியா் மீது அவதூறு : பாஜக நிா்வாகி கைது

7th Apr 2020 12:45 AM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இஸ்லாமியா் மீது முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்டத் தலைவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முகநூல் பதிவில் இஸ்லாமியா்கள் மீது கரோனா தொடா்பான தகவல்களை புணைந்து தகவல் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிவிடப்பட்டது. இதுதொடா்பாக, வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம்-3 ஆம் சோ்த்தி, நல்லான்குத்தகை பகுதியைச் சோ்ந்த பாஜக நாகை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ள வீ. வீரமணி (23) இந்த பதிவை செய்ததாக தெரியவந்ததையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT