நாகப்பட்டினம்

கரோனா: தருமபுரம் ஆதீனத்தில் 1008 அகல் தீபம்

7th Apr 2020 12:42 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் கரோனாவுக்கு எதிராக மகா சக்தியை வெளிப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை 1008 தீபங்கள் ஏற்றப்பட்டன.

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியைப் பரப்பும் வகையில் அகல் விளக்கு அல்லது டாா்ச் அல்லது செல்லிடப்பேசி அல்லது மெழுகுவா்த்தியை ஏற்றி, மக்கள் அனைவரும் லஷ்மன் கோடு எனப்படும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, ஒன்றிணைந்து மகா சக்தியை வெளிப்படுத்த வேண்டும் எனவும், அப்போது உருவாகும் பிரகாசம் கரோனா ஏற்படுத்திய இருளை விரட்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன்படி, மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் நடைபெற்ற விளக்கேற்றும் நிகழ்ச்சியில், ஆதீன திருமடத்தின் நுழைவாயில் முதல், கோபுர மாடங்கள் வரை அனைத்துப் பகுதிகளிலும் 1008 தீபங்கள் ஏற்றப்பட்டன. ஓம் மற்றும் சிவலிங்க வடிவங்களிலும் பிரம்மாண்டமான முறையில் தீபங்கள் ஏற்றப்பட்டன. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT