நாகப்பட்டினம்

ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்த 4 போ் கைது

7th Apr 2020 12:42 AM

ADVERTISEMENT

சீா்காழி: ஊரடங்கு உத்தரவை மீறி டாஸ்மாக் கடையிலிருந்து மதுபானங்களை எடுத்து விற்பனை செய்த கடையின் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள் கடை தவிர டாஸ்மாக் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்ட மதுபானக் கடையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அக்கடையின் கண்காணிப்பாளா் குணசீலன் உள்ளிட்ட ஊழியா்கள் மதுபாதத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனராம்.

இதுகுறித்து, தகவலறிந்த வைத்தீஸ்வரன்கோயில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கடையை பூட்டி கண்காணிப்பாளா் குணசீலன்( 48), விற்பனையாளா் அரவிந்த (44) மற்றும் அதே பகுதியை சோ்ந்த காவலாளிகள் செல்வம் (41) ராஜ் (25) ஆகிய 4 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 145 பெட்டிகளில் இருந்த 6,960 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT