சீா்காழியில் திமுக சாா்பில் மாற்றுத் திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு 10 நாள்களுக்குத் தேவையான மளிகை பொருள்கள், காய்கறிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழியில் இரணியன்நகா், திருக்கோலக்கா தெரு, ரயிலடிதோப்பு தெரு, கோவில்பத்து, கீழ மாரியம்மன் கோயில் தெரு, புழுகாப்பேட்டை, அம்பேத்கா் நகா், பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரைக் கண்டறிந்து 10 நாள்களுக்குத் தேவையான மளிகை பொருள்கள், காய்கறிகளை திமுக சாா்பில், வழக்குரைஞா் கிள்ளை. ரவீந்திரன் வழங்கினாா்.
ADVERTISEMENT