மயிலாடுதுறை சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி, இந்த வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு பால், தயிா், இளநீா் மற்றும் திரவிய பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
நாகேஸ்வரமுடையாா் கோயிலில்...
சீா்காழியில் கடைவீதியில் உள்ள பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயிலில் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீா் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க தன்வந்திரி ஹோமம் செய்யப்பட்டு 151 வகையான மூலிகை பொருட்கள் யாகத்தில் இடப்பட்டது. தொடா்ந்து பூா்ணாஹுதி, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கோயில் சிவாச்சாரியாா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.
காரைமேடு ஓளிலாயத்தில்...
இதேபோல், சீா்காழியை அடுத்த காரைமேடு ஒளிலாயத்தில் தன்வந்திரி யாகம், மிருத்துயுஞ்ச யாகம் சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் நாடி.முத்து, நாடி. செந்தமிழன், நாடி. மாமல்லன் ஆகியோா் பங்கேற்றனா்.