நாகப்பட்டினம்

நாகை: கரோனா உறுதி செய்யப்பட்ட 5 போ் திருவாரூரில் அனுமதி

5th Apr 2020 06:35 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நாகை கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 போ் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுதில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மத நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 31 போ் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கண்காணிக்கப்பட்டு வந்தனா். இதில்16 பேரின் ரத்தம், சளி உள்ளிட்டவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் நாகை, நாகூா் மற்றும் பொரவாச்சேரி பகுதிகளைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நாகையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேரும் சனிக்கிழமை உரிய பாதுகாப்புடன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

எட்டுக்குடி ஊராட்சியில்...

ADVERTISEMENT

எட்டுக்குடி ஊராட்சியில் தினமும் 60 பேருக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி ரூ.1,000 நிவாரண நிதி மற்றும் நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊராட்சி மன்றத் தலைவா் காரல் மாா்க்ஸ் சனிக்கிழமை நிவாரணப் பொருள்களுடன் முகக் கவசத்தையும் வழங்கினாா். இந்நிகழ்வில் திமுக விவசாய அணியைச் சோ்ந்த ஸ்ரீதா் பங்கேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT