வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில், நடமாடும் மளிகை விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே மளிகை பொருள்களை பெற்றுக்கொள்ளும் வகையில், வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் நடமாடும் மளிகை பொருள் விற்பனையகத்தைத் தொடங்கிவைத்தாா்.
இருந்த போதிலும், சிலா் மளிகை கடைகள், காய்கறி கடைகளுக்கு செல்வதால், அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக சவுக்கு மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.