வேதாரண்யத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 39 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் நடந்து சென்ற 3 போ், மிதிவண்டியில் சென்ற 2 போ் என 24 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 2 மிதிவண்டி, 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், கரியாப்பட்டினம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் 10 பேரும், வாய்மேடு காவல் நிலைய சரகத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டனா். அவா்களது இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சீா்காழியில்...
இதேபோல், சீா்காழியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்த 17 பேரையும், தனிமைப்படுத்தப்பட்ட நபரையும் காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் ராஜா ஆகியோா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
ADVERTISEMENT