திருமருகல் ஒன்றியம், திருப்புகளுா் ஊராட்சியில் 1,200 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்புகளுா் ஊராட்சி மன்றத் தலைவரான பி. காா்த்திகேயன், தனது ஊராட்சிக்கு உட்பட்ட திருப்புகளுா், வவ்வாலடி ஆமப்பட்டம், அரசூா், பூவாளித் தெரு தெற்குலேரி, செக்கடித்தெரு, நெய்க்குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் 1,200 குடும்பங்களுக்கு தலா 3 கிலோ வீதம் காய்கறிகள், முகக் கவசங்களை வீடுதோறும் சென்று இலவசமாக வழங்கினாா்.
இதில் திருப்புகலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ரவிக்குமாா், வவ்வாலடி ஜமாத் நிா்வாகி முசாகுதீன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுந்தரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT