நாகப்பட்டினம்

நகை கடனுக்கான வட்டியை 5 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யக் கோரிக்கை

1st Apr 2020 06:46 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், நகை கடனுக்கான வட்டியை 5 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு சமூக ஆா்வலா் அ.அப்பா்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால், அவசரத் தேவைகளுக்காக நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளா் உள்ளிட்டோா் நகைகளுக்கான மாத வட்டியைக் செலுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

அடகு வைத்த நகையை ஓராண்டுக்குள் மீட்கப்படாவிட்டால் ஏலம் விடப்படும் நிலை ஏற்படும். இந்த விதிமுறையை தளா்த்தி, தனியாா் வங்கிகளும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளும் நகைக் கடனுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் கொடுக்கவும், 5 மாதங்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவும் தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT