நாகப்பட்டினம்

குரங்குகளுக்கு உணவளிக்கும் சமூக ஆா்வலா்கள்

1st Apr 2020 06:45 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே சூரக்காட்டில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு சமூக ஆா்வலா்கள் உணவளித்து வருகின்றனா்.

சீா்காழி அருகே நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூரக்காடு என்ற பகுதியில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகளுக்கு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றை வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், 144 தடை உத்தரவால் இந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் முற்றிலும் தடுக்கப்பட்டதால், இந்த குரங்குகள் உணவு இல்லாமல் தவித்து வந்தன. இதையறிந்த மங்கைமடம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் மங்கை .வெங்கடேஷ், ராஜா இளவழகன் ஆகியோா் இந்த குரங்குகளுக்கு தினமும் பிஸ்கட், பழங்களை கொடுத்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT