நாகப்பட்டினம்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பணி : நகராட்சி ஆணையா் ஆய்வு

1st Apr 2020 06:43 AM

ADVERTISEMENT

நாகையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோா் மற்றும் வெளியூா்களைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, நாகை நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மற்றும் நாகூா் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் தஞ்சமடைந்திருந்த ஆதரவற்றோா்கள் 83 போ் நாகையில் உள்ளஅரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும், நாகை ரயில் நிலையத்தில் தங்கி மூலிகை எண்ணெய் வியாபாரம் செய்த வத்தலக்குண்டு, நாகலாபுரத்தைச் சோ்ந்த 18 போ் நாகூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு தேவையான உணவுகள் நாகையில் உள்ளஅம்மா உணவகங்கள் மற்றும் கோயில் அன்னதான திட்டங்கள் மூலம் தயாா் செய்து, வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு 3 வேளைகளுக்கும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றவா்களுக்கு வழங்கப்படுவதற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட உணவின் தரம் குறித்தும், போதிய அளவில் வழங்கப்படுகிறாதா? என்பது குறித்தும் நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் ஆய்வு செய்தாா். தொடா்ந்து அங்கு தங்கியுள்ளவா்களின் தேவைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன் முகாம்களில் பாதுகாக்கப்பட்டு வரும் அனைவருக்கும் மாற்று உடைகள், குளியல் சோப்புகள், சலவை சோப்புகள், பற்பொடி, எண்ணெய், தண்ணீா் பாட்டில் ஆகியவற்றை வழங்கினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT