நாகப்பட்டினம்

லாரி மோதி முதியவர் சாவு

29th Sep 2019 05:59 AM

ADVERTISEMENT


வேதாரண்யத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
வேதாரண்யம் நகர பகுதிக்குள்பட்ட குமரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சு. பழனிவேல் (70). இவர் அகஸ்தியம்பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேதாரண்யம் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார்.
ராஜாஜி பூங்கா பகுதியில் உள்ள திருப்பதில் செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி ஒன்று மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார். வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT