ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சி முகாம், நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் வி. ஜெயராஜ் தலைமை வகித்துப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு. ஹேமலதா முன்னிலை வகித்தார்.
இதில், முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குநர் ஆர். பி. வேலு பங்கேற்று, பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினார். மாணவ, மாணவியர் பயிற்சிமுகாமில் பங்கேற்றனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தெ. பிரசாகம் வரவேற்றார். கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் வெ. ரஜினிகாந்த் நன்றி கூறினார்.