நாகப்பட்டினம்

மக்கள் குறைகேட்பு முகாம்

22nd Sep 2019 04:07 AM

ADVERTISEMENT


பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இம்முகாமில்,  பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடக்கம், முத்தூர், கொடவிளாகம், பெரம்பூர், சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.  பூம்புகார் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தனி வட்டாட்சியர் திருமாறன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், அதிமுக ஒன்றியச் செயலாளர் தமிழரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT