நாகப்பட்டினம்

பாஜக அரசு தொலைநோக்கு இல்லாமல் செயல்படுகிறது: ஸ்ரீ வல்ல பிரசாத் குற்றச்சாட்டு

22nd Sep 2019 04:12 AM

ADVERTISEMENT


மத்திய பாஜக அரசு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் செயல்படுகிறது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் குற்றம்சாட்டினார்.
நாகை மாவட்டம், சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், சரத்சந்திரன், ஏபிஎஸ். குமார், நகர்மன்ற முன்னாள் தலைவர் கனிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் லெட்சுமணன் வரவேற்றார். 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மாநில பொதுச் செயலாளர் கீரனூர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அறிவுடைநம்பி, விஆர்ஏ. அன்பு, பானுசேகர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஸ்ரீ வல்ல பிரசாத் கூறியது: 
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மத்திய பாஜக அரசு தொலைநோக்குப் பார்வையில்லாமல், அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகின்றனர்.
 காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறவுள்ள காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழா கூட்டத்தில் மோடி அரசின் தவறுகள் மக்களிடம் விளக்கிக் கூறப்படும் 
என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT