நாகப்பட்டினம்

திமுக தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சிக் கூட்டம்

22nd Sep 2019 04:06 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் திமுக தொழில்நுட்ப அணியினருக்கு பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா எம். முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எம். செபஸ்டின் சார்லி, மயிலாடுதுறை தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருண், பூம்புகார் தொகுதி ஒருங்கிணைப்பாளர் இரா. சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், திமுக தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா பங்கேற்று, முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர், ஷேர்சாட் ஆகிய சமூக வலைதளங்களில் எவ்வாறு கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ. ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கி. சத்தியசீலன், எம்.பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் கே.ஜி. சீனிவாசன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.சத்தியேந்திரன், கண்ணகி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT