நாகப்பட்டினம்

தன்னார்வ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

22nd Sep 2019 04:09 AM

ADVERTISEMENT


நாகையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனசாட்சி நட்புக் கரங்கள் எனும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தன்னார்வ அமைப்பின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆர். சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து அக்டோபர் 2- ஆம் தேதி  மகாத்மா காந்தி பிறந்தநாளன்று நாகை அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான  முகாம் நடத்துவது, மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது, ரத்தக் கொடையாளர்களின் பெற்றோர்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த  தாஜூதீன், ஜம்புகேசன்,  சுகுமார், மணிவண்ணன், கண்ணு வாப்பா, ஸ்டாலின், அறிவழகன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முரளி வரவேற்றார். முருகையன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT