சீர்காழி தமிழாசிரியைக்கு ஆள் வினை உடைமை தமிழ் ஆசிரியர் எனும் விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் ரோட்டரி சங்கம், நல்லோர் வட்டம் இணைந்து நடத்திய தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், சீர்காழி தென்பாதி விதிபி நடுநிலைப் பள்ளி தமிழாசிரியை கு. சரஸ்வதிக்கு, தில்லி அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத் தலைவரும், முன்னாள் எம்பியுமான தருண்விஜய் ஆள் வினை உடைமை தமிழ் ஆசிரியர் எனும் விருதை வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்ற தமிழாசிரியை சரஸ்வதியை, டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பாலாஜி, செயலாளர் வீரபாண்டியன் மற்றும் முன்னாள் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பாராட்டினர்.