திருக்குவளை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி ஊழியர்களுக்கும், விவசாயிக்கும் தகராறு ஏற்பட்டதால், விவசாயி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டார்.
திருக்குவளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் உள்ள தொகை, மற்றொருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்ட விவசாயி குமரவேலுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து குமரவேலு தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால், திருக்குவளை பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.