நாகப்பட்டினம்

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

17th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

மின்வாரியத்தில் காலியாகவுள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்க வலியுறுத்தியுள்ளது. 
சீர்காழியில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரியத்தின் நாகை, திருவாரூர் மின்பகிர்மான வட்டங்களில் டிஎன்இபி எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சங்க மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டத்தில், ஒவ்வொரு பணி பிரிவிலும் தொடக்க நிலை பதவிகளை நிரப்ப வேண்டும், ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என தேர்தல் நடத்தி ஜனநாயக முறைப்படி அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
சங்கத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாகை மாவட்டத் தலைவர் சரவணன், திருவாரூர் மாவட்ட செயல் தலைவர் ராஜகோபால், சீர்காழி கோட்டச் செயலர் விஜயகுமார், மாநிலத் தலைவர் மணிகண்டன், மாநில பொதுச் செயலர் சேக்கிழார், மாநில பொருளாளர் லூர்துபாண்டியன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT