நாகை மாவட்டம், சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் திங்கள்கிழமை வழங்கினார்.
பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் முன்னிலை வகித்தனர். இதில், பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்து கொண்டு 201 மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். தலைமையாசிரியர் அசோக் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.