நாகப்பட்டினம்

தேசிய கிரிக்கெட் போட்டி: மாணவர்களுக்கு வழியனுப்பு விழா

17th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உத்தரப் பிரதேசத்துக்குப் புறப்பட்ட மயிலாடுதுறை மாணவர்களுக்கு அண்மையில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
தேசிய அளவிலான டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில்,17 வயது பிரிவில் தமிழக அணிக்கான வீரர்கள் 16 பேர் கடந்த மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தகுதிப் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில், நாகை மாவட்டத்திலிருந்து தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முகம்மது அப்துல் ரிஷ்வான், சபரிமணிவாசகன், அஜய் ஆகியோரை உத்தரப் பிரதேசத்துக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் சங்கச் செயலாளர் ரவிச்சந்திரன், மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் வழக்குரைஞர் புகழரசன், திமுக ஒன்றிய பொருளாளர் முருகுமணி, சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உள்ளிட்டோர் வாழ்த்தி, வழியனுப்பினர்.  இவர்கள், சென்னையில் இருந்து ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் மதுரா நகருக்கு ஏனைய  தமிழக வீரர்களுடன் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT