சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட உரிமையியல் நீதிபதி உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதில், காசோலை, ஜீவனாம்ச வழக்குகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.20 லட்சத்து 5 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது.
இதில் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.